சில நேரங்களில் எதற்கெனத்தெரியாது அழத்தோணும்!

ஓவ்வொரு மழை இரவிலும் 

உன் நினைவுகள் - இடியிடிக்கும்

என் மனக்காட்டில்...

கணக்கு வழக்கு இல்லாமல்,

பால பாலமாய் வெடித்திருக்கும் 

மனக்குளத்தில் - மண்வாசனையைக்

கிளப்பிச்செல்லும்...

மனசு நிரம்பி 

கண்களில் வழியும், 

காதலும் - மழை நீரும்...

கடைசியாய் நீ கொடுத்துப்போன

முத்தத்தின் கதகதப்பு போதும் 

காலன் வரும்வரைக்கும்...

காலப் பயணமென்பது 

காதலுக்கு(தோற்ற)  மட்டுமே உரித்தானது!

Comments