சில நேரங்களில் எதற்கெனத்தெரியாது அழத்தோணும்!
ஓவ்வொரு மழை இரவிலும் உன் நினைவுகள் - இடியிடிக்கும் என் மனக்காட்டில்... கணக்கு வழக்கு இல்லாமல், பால பாலமாய் வெடித்திருக்கும் மனக்குளத்தில் - மண்வாசனையைக் கிளப்பிச்செல்லும்... மனசு நிரம்பி கண்களில் வழியும், காதலும் - மழை நீரும்... கடைசியாய் நீ கொடுத்துப்போன முத்தத்தின் கதகதப்பு போதும் காலன் வரும்வரைக்கும்... காலப் பயணமென்பது காதலுக்கு(தோற்ற) மட்டுமே உரித்தானது!